தீபாவளி போனஸ்.. 3வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு!

Author: Hariharasudhan
28 October 2024, 7:36 pm

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கூடுதாலக 559 இடங்கள் சேர்க்கப்பட்டு 9,491 இடங்கள் நிரப்பப்படுகின்றன.

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி 30 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இந்தத் தேர்விற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தான், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று (அக்.28) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு, தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை. இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்.

TNPSC Group 4 results

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் அல்லது கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது.

இதையும் படிங்க: தேவர் குரு பூஜை.. ஒரே நேரத்தில் கூடும் எதிரெதிர் துருவங்கள்!

எனவே, தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலம், மேலும் 559 கூடுதல் பணியிடங்களைச் சேர்த்து மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், முதலில் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. பின்னர், செப்டம்பரில் மேலும் 480 இடங்களும், அக்டோபரில் 2 ஆயிரத்து 208 பணியிடங்களும் கூடுதலாக அனுமதிக்கப்பட்டது.

  • GBU movie audience reaction எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…