அவதூறு பரப்பணும்.. திமுகவை மக்கள் வெறுக்கணும் : காய் நகர்த்தும் பாஜக.. அமைச்சர் சேகர்பாபு பரபர குற்றச்சாட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 2:41 pm

அவதூறு பரப்பணும்.. திமுகவை மக்கள் வெறுக்கணும் : காய் நகர்த்தும் பாஜக.. அமைச்சர் சேகர்பாபு பரபர குற்றச்சாட்டு!!!

இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது என்பதற்காக அறநிலையத்துறை தொடங்கப்பட்டது.

பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் தவறான முறையில் கோயில் சொத்துக்களை பயன்படுத்துவதை தடுக்க தொடங்கப்பட்டது.

1818-ல் தொடங்கி பல்வேறு கட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் 1951-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. திமுக அரசு வந்தவுடன் குறைகளை பதிவிடுக என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டில் 48 கோயில்கள் முதுநிலை கோயில்களாக அடையாளம் காணப்பட்டு அங்கு நடைபெறும் அனைத்தும் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. இந்த 48 கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 302

    0

    0