மூணாறு சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு… 2 மாதம் வரையாடுகளை பார்க்கவே முடியாது : வனத்துறை உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 11:01 am

மூணாறு சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு… 2 மாதம் வரையாடுகளை பார்க்கவே முடியாது : வனத்துறை உத்தரவு!

மூணாறு அருகே ராஐமலை பகுதியில் அதிகளவு வரையாடுகள் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வரையாடுகளை பார்வையிட்டு செல்வர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி-1-ஆம் தேதி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரையிலும் வரையாடுகளை பார்வையிட தடை விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு காரணம் இந்த காலக்கட்டம் என்பது வரையாடுகளின் இனப்பெருக்க காலமாக ஆகும். இதனால் வரையாடுகளை பார்வையிட தடைவிதிக்கப்படும்.

அதன்படி இந்த வருடம் பிப்-1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை வரையாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 404

    0

    0