இன்று நண்பகல் 12 மணியுடன் பழனி கோவில் நடை அடைப்பு : வில் அம்பு நிகழ்ச்சியை காண அதிகரித்த பக்தர்கள் கூட்டம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 11:29 am

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான வில்-அம்பு போடும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 9வது நாளான இன்று மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பழனி ஆதினம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை தேவதா மரியாதையுடன் பல்லக்கில் அழைத்து வரும் நிகழ்ச்சியும்,மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக் குமாரசுவாமியுடன்‌ கோதைமங்கலத்தில் உள்ள கோதை ஈஸ்வரர் கோவிலில் வன்னிகாசுரனை வதம் செய்யும் வகையில் அம்புவில் போடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு 12மணிவரை மட்டுமே பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ள நிலையில் பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

  • Vidaamuyarchi ticket booking தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!