‘வாங்கங்க வணக்கங்க-ணா..’நம்ம ஊரு கோயம்புத்தூருக்கு வயசு 218’..!! இன்று கோயம்புத்தூர் தினம்…!!

Author: Babu Lakshmanan
24 November 2022, 10:43 am

கோவை : 218வது கோயம்புத்தூர் தினம் இன்று கோவை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆமாங்கோ,சிறுவாணி தண்ணியும், சில்லென்ற காற்றும், சுற்றி மேற்கு தொடர்ச்சி மலையும், மலை அடிவார மருதமலை முருகனும், மரியாதை தெரிஞ்ச மக்களும், வாங்கங்க வணக்கங்க என்று அன்போடு அழைக்கும் நம்ம கோயம்புத்தூருக்கு இன்று 218 ஆண்டுகள் ஆகிறது.

coimbatore day - updatenews360

தொழில் துறை நகரங்களான தலைசிறந்த நகரங்களில் முக்கியமாக ஒன்றான கோயம்புத்தூர் நகரமும் திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படும் கோவைக்கு சிறப்பு பெயர் உண்டு.

சுதந்திரத்திற்கு முன்பு கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நவம்பர் மாதம் 24-ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது.

coimbatore day - updatenews360

இதனை கொண்டாடும் விதமாக, நவம்பர் 24 கோயம்புத்தூர்க்கு பிறந்தநாளாக கோவை மக்கள்களால் கொண்டாடப்பட்டு வருவது சிறப்பு வாய்ந்தவை.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது மாநகரத்தின் சிறப்பு.

coimbatore day - updatenews360

தற்போதைய வெரைட்டி ஹால் ரோட்டில் டிலைட் திரையரங்கம் தமிழ்நாட்டிலேயே முதல்முதலாக 1914-ஆம் ஆண்டு முதல் திரையரங்கம் துவங்கப்பட்டது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் கோவையின் தனித்துவத்தை பற்றி …

coimbatore day - updatenews360

சரி இருக்கட்டும், கோவை என்றவுடன் உங்களுக்கு முதலில் நியாபகத்திற்கு வருவது என்ன..?

coimbatore day - updatenews360
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…