புத்தாண்டு தொடக்கத்திலேயே உச்சத்தை நோக்கி தங்கம் விலை!

Author: Hariharasudhan
3 January 2025, 10:29 am

சென்னையில், இன்று (ஜன.03) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை 1ஆம் தேதி முதலே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

Gold and silver price today

இதன்படி, இன்று (ஜன.03) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 640 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக முக்கிய புள்ளிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. காரணம் இதுவா?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 913 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Vidamuyarchi Thaniye Song மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!