3 நாட்களாக மாறாத தங்கம், வெள்ளி விலை!

Author: Hariharasudhan
6 January 2025, 10:43 am

சென்னையில், இன்று (ஜன.06) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை தொடக்கம் முதலே அதிகரிக்கத் தொடங்கியது. முன்னதாக, 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது.

Gold and Silver rate today in Chennai

ஆனால், அடுத்த ஒரு நாள் குறைந்த தங்கம் விலை, தற்போது வரை அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி, இன்று (ஜன.06) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தேசிய கீதம் அவமதிப்பு? 3 நிமிடங்களில் புறப்பட்ட ஆளுநர்.. ஆண்டின் முதல் பேரவை புறக்கணிப்பு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 871 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!