கறார் காட்டும் வெள்ளி.. இன்றைய தங்கம் விலை என்ன?

Author: Hariharasudhan
7 January 2025, 10:29 am

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை தொடக்கம் முதலே அதிகரிக்கத் தொடங்கியது. முன்னதாக, 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது.

Gold and silver price today

ஆனால், அடுத்த ஒரு நாள் குறைந்த தங்கம் விலை, தற்போது வரை அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி, இன்று (ஜன.06) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: யார் இந்த அனிதா ஆனந்த்? கனடா புதிய பிரதமர் ரேஸில் தமிழக வம்சாவளி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 871 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Kovai Sarala Talked About Vadivelu வடிவேலு கூட நடிக்கணும்னா அதை பண்ணியே ஆகணும்.. நான் அனுபவிச்ச வேதனை : கோவை சரளா ஓபன் டாக்!
  • Views: - 64

    0

    0

    Leave a Reply