தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
22 March 2025, 10:36 am

சென்னையில் இன்று (மார்ச் 22) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 200 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold rate today

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 22) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: வெள்ளை அறிக்கை வெளியிட எதற்கு இத்தனை தயக்கம்? சமாளிக்காதீங்க : திமுக மீது அண்ணாமலை காட்டம்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 978 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 2 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…