இதைத்தான் எதிர்பார்த்தோம்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan13 December 2024, 10:26 am
சென்னையில் இன்று (டிச.13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம், தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்களால் தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உச்சத்தை அடைந்தது.
ஆனால், இன்று தங்கம் விலை சரிவைச் சந்தித்து உள்ளது. இதன்படி, இன்று (டிச.13) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல் மருத்துவமனையில் கட்டுக்கடங்கா தீ விபத்து.. 7பேர் பலி.. என்ன காரணம்?
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 892 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.