கண்ணாமூச்சி விளையாடும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
16 November 2024, 10:43 am

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி அடைந்ததை அடுத்து, தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்தது. இருப்பினும், இடையில் 2 நாட்கள் 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்த தங்கம் விலை, பின்னர் மீண்டும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்து உள்ளது.

SILVER PRICE TODAY

இதன்படி, இன்று (நவ.16) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 935 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 55 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: எய்ம்ஸ் செங்கலா? இங்க ஒரு செங்கல் கூட இல்லையே.. அடித்துச் சொல்லிய அண்ணாமலை!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றமில்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!