சீக்கிரம் கிளம்புங்க.. மளமளவென குறைந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan18 December 2024, 10:30 am
சென்னையில் இன்று (டிச.18) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் உள்ள கார்த்திகை மாதம் முடிந்து, மார்கழித் திங்கள் விருட்சமாக விடிந்து உள்ளது. இந்த நிலையில், தங்கம் விலையும் தாறுமாறாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று சிறிது உயர்ந்து ஷாக் கொடுத்தது. ஆனால், மாறாக இன்று மீண்டும் தங்கம் விலை குறையத் தொடங்கி உள்ளது.

இதன்படி, இன்று (டிச.18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குத்துப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதியாதது ஏன்? ஐகோர்ட் சரமாரி கேள்வி!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 785 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால் ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.