இனி என் ஆட்டம் ஆரம்பம்.. 2வது நாளாக உயர்ந்த தங்கம்!

Author: Hariharasudhan
19 November 2024, 10:11 am

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர்: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்த சில நாட்கள் தங்கம் விலை குறைவாகக் காணப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் 100 ரூபாய்க்கு மேல் கிராமுக்கு அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்கு தங்கம் இறங்குமுகத்திலே காணப்பட்டது.

SILVER PRICE TODAY ON NOV 19

ஆனால், நேற்று முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதன்படி, இன்று (நவ.19) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மும்பைக்கு கூப்பிட்டு போயி சூர்யா சோலி முடித்த ஜோதிகா – வாய் மூடிட்டு ஆவது இருக்காங்களா?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும், கோவையிலும் இதே விலையே தொடர்கிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 119

    0

    0