சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், இடைப்பட்ட ஒருவார காலம், தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போன்று தொடர்ந்து இறங்குமுகத்திலே காணப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன்படி, இன்று (நவ.20) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் உள்ளி காரம் ரெசிபி!!!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.