சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்த சில நாட்கள் தங்கம் விலை சரியத் தொடங்கியது. ஆனால், அடுத்து 100 ரூபாய் வரை உயர்ந்த தங்கம் விலை நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. தொடர்ந்து, தங்கம் விலை தாங்கிக் கொள்ள முடியாத அளவு சரியத் துவங்கியது.
இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதன்படி, இன்று (நவ.21) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 145 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: உருகி உருகி காதலித்த ரசிகை… ரகுமானும் காதலித்தாரா ?..வெளிவராத ரகசியம் ..!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் ஏதும் இல்லாமல் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.