கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
27 December 2024, 10:29 am

சென்னையில் இன்று (டிச.27) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. அதன் பின்னர், வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த தங்கம் விலை, அடுத்த சில நாட்கள் உச்சத்தை நோக்கிச் சென்றது. பின்னர், கடந்த சில நாட்களாக மீண்டும் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது.

Silver Price today

இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (டிச.27) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மன்மோகன் சிங் மறைவு; பல்வேறு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் ரத்து! கருப்பு பேட்ச் உடன் இந்திய அணி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 798 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 384 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!