ரூ.58 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
27 November 2024, 10:23 am

சென்னையில் இன்று (நவ.27) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்து தங்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. பின்னர், ஒரு வாரம் மட்டும் தங்கம் விலை கடும் சரிவைச் சந்தித்து, நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை அளித்தது. இந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

Silver price today on November 27

இதன்படி, இன்று (நவ.27) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 105 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பிரபல நடிகருக்கு இரவில் போன்…திட்டு வாங்கிய விக்னேஷ் சிவன்..!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!