முகூர்த்த நாளில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan28 November 2024, 10:26 am
சென்னையில் இன்று (நவ.28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: வணிகச் சந்தையில் கமாடிட்டி விலையைப் பொறுத்து தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கபடுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக கடும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை சென்று கொண்டிருந்ததால், நகைப் பிரியர்கள் சற்று திகைப்படைந்தனர் என்றே சொல்லலாம்.
ஆனால், தற்போது மீண்டும் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (நவ.28) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: உதயநிதி பிறந்தநாளுக்காக வெயிலில் மாணவர்களை அலைக்கழித்த விவகாரம் : செக் வைத்த பாஜக!!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 595 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் ஏதும் இல்லாமல் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.