சென்னையில் இன்று (டிச.30) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன் பின்னர், வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த தங்கம் விலை, அடுத்த சில நாட்கள் உச்சத்தை நோக்கிச் சென்றது. பின்னர், கடந்த சில நாட்களாக மீண்டும் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (டிச.30) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அன்ணனாகவும்.. அரணாகவும்.. திடீரென விஜய் கைப்பட கடிதம் எழுத காரணம் என்ன?
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 799 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.