அலர்ட்டா இருக்கிங்களானு பாத்தேன்.. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
5 December 2024, 10:32 am

சென்னையில் இன்று (டிச.5) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: தொடர்ச்சியான முகூர்த்த நாட்கள், சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை கடந்த சில வாரமாக அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், கமாடிட்டியைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் தங்கம் விலை சற்று அதிகரித்து உள்ளது.

Silver price today

இதன்படி, இன்று (டிச.5) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: காவு வாங்கிய புஷ்பா 2… திரையரங்கில் தாய் பலி.. 9 வயது மகன் கவலைக்கிடம்!

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் 7 ஆயிரத்து 788 ரூபாய்க்கும், சவரன் 62 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 94

    0

    0