வீக்கெண்ட் பர்ச்சேசுக்கு ரெடியா? அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
Author: Hariharasudhan6 December 2024, 10:24 am
சென்னையில் இன்று (டிச.06) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறித்து 7 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: முகூர்த்த நாட்கள், சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை கடந்த சில வாரமாக அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், கமாடிட்டியைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் தங்கம் விலை சற்று அதிகரித்து உள்ளது.
இதன்படி, இன்று (டிச.6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சுந்தர்.சி-யின் கலக்கல் சம்பவம்..கலகலப்பு 3-யில் முக்கிய நடிகர்கள்…குஷியான ரசிகர்கள்..!
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் 7 ஆயிரத்து 764 ரூபாய்க்கும், சவரன் 62 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளி விலை மாற்றமில்லமல் ஒரு கிராம் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.