எனக்கும் லீவ் முடிஞ்சது.. அதிகரிக்கத் தொடங்கிய தங்கம் விலை!

Author: Hariharasudhan
9 December 2024, 10:27 am

சென்னையில் இன்று (டிச.09) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: முகூர்த்த நாட்கள், சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை கடந்த சில வாரமாக அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், கமாடிட்டியைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

Silver Price today

அந்த வகையில், கடந்த வார இறுதியில் இருந்தே தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (டிச.9) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: எப்போ.. Oh my God.. ஷாக்கான ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் 7 ஆயிரத்து 777 ரூபாய்க்கும், சவரன் 62 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளி விலையிலும் மாற்றமில்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!