இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?

Author: Hariharasudhan
4 December 2024, 10:52 am

சென்னையில் இன்று (டிச.04) ஒரு கிராம் தங்கம் விலை மாற்றம் ஏதும் இல்லாமல் 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றால் தங்கம், வெள்ளி விலையும் சமீப காலமாக தொடர் ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதேநேரம், கமாடிட்டியைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், முகூர்த்த நாளான இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Silver Price today

இதன்படி, இன்று (டிச.04) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் மாற்றம் இல்லாமல் 7 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது… தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 778 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • before marriage priyanka was pregnant question raised by bayilvan ranganathan திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி