நெருங்க முடியாத உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
23 November 2024, 10:20 am

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 75 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலை அடுத்து தங்கம் விலை ஏறுமுகத்துடன் காணப்பட்டது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இறங்குமுகத்திலே இருந்தது. இந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை தினமும் ஏறிக் கொண்டே வருகிறது.

Silver Rate today on Nov 23

இதன்படி, இன்று (நவ.23) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 75 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் மட்டும் கிடைப்பது ஏன்?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 805 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி