தலைச்சுற்ற வைக்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.840 உயர்வு!
Author: Hariharasudhan4 February 2025, 10:26 am
சென்னையில், இன்று (பிப்.04) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: புத்தாண்டு தொடங்கிய முதலே தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஆனால், பொங்கல் பண்டிகை நாட்களில் தங்கம் விலை சற்று ஆறுதலை அளித்தது. இருப்பினும், கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிகரித்தே காணப்பட்டது. அந்த வகையில், பிப்ரவரி தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது.
இதன்படி, இன்று (பிப்.04) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 840 ரூபாய் அதிகரித்து 62 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தந்தையின் உடலிலும் பாதி வேண்டும்.. இறுதிச் சடங்கில் அண்ணன் – தம்பி தகராறு.. எப்படி முடிந்தது?
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 68 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.