வரலாற்றில் புது உச்சம்.. ரூ.63 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

Author: Hariharasudhan
5 February 2025, 10:13 am

சென்னையில், இன்று (பிப்.05) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 95 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 50 ரூபாய்க்கு மேல் கட்டாயம் உயர்கிறது. இதனால், ஒரு சவரன் 60 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று வரலாற்றின் உச்சமாக 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது தங்கம் விலை.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (பிப்.05) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 95 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 905 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 760 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: நடுரோட்டில் சண்டை போட்ட ராகுல் டிராவிட்.. தீயாய் பரவும் வீடியோ!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 68 ஆயிரத்து 984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் ஒரு ரூபாய் உயர்ந்து 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!
  • Leave a Reply