சென்னையில், இன்று (மார்ச் 3) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 3) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 64 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் நெருங்கும்போது தெரியும்.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு.. அரசியல் களத்தில் பரபரப்பு!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 798 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 834 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.