மகளிர் தின ஆஃபர் போல.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Author: Hariharasudhan
7 March 2025, 10:39 am

சென்னையில், இன்று (மார்ச் 7) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold Rate today

ஆனால், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 7) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தினமும் ஒவ்வொருவருடன் உடலுறவு.. நீ தப்பானவள் என திட்டிய தந்தை : நடிகை சோனா கண்ணீர்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Ilayaraja கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
  • Leave a Reply