சென்னையில், இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை தொடக்கம் முதலே அதிகரிக்கத் தொடங்கியது. முன்னதாக, 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது. ஆனால், அடுத்த ஒரு நாள் குறைந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக அதே நிலையில் நீடித்தது.
இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (ஜன.09) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 35 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 260 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பதி கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவா? ஆட்சியர் முக்கிய தகவல்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.