இதுக்கு ஒரு முடிவே இல்லையா.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

Author: Hariharasudhan
15 January 2025, 10:38 am

சென்னையில், இன்று (ஜன.15) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (ஜன.15) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு… 2 குழந்தைகளுடன் தவித்த வெளிநாட்டு பயணி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 6 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் ஒரு ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • kamal haasan not giving handshake to writer charu niveditha பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே