கண்ணாமூச்சி ஆடும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
17 March 2025, 10:14 am

சென்னையில், இன்று (மார்ச் 17) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 100 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 65 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

Gold rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 17) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: காதலிக்காக போட்ட திட்டம்.. சென்னையில் இரட்டைக் கொலை.. ப்ளான் மிஸ்ஸிங்கால் பறிபோன உயிர்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 956 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து 113 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!