பெருமூச்சு விட வைத்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
18 January 2025, 10:25 am

சென்னையில், இன்று (ஜன.18) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 435 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை சென்று கொண்டிருக்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

Gold and silver rate today

ஆனால், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி, இன்று (ஜன.18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 435 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 59 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: முதல்முறையாக களத்தில் மக்களைச் சந்திக்கிறார் விஜய்.. ஆட்டம் காணுமா தமிழக அரசியல்?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 111 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…