மீண்டும் ரூ.8 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
18 February 2025, 10:26 am

சென்னையில், இன்று (பிப்.18) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டியும் உயர்ந்தது. இதனால், ஒரு சவரன் 63 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து, மீண்டும் கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தொடவுள்ளது.

Gold rate today

இதன்படி, இன்று (பிப்.18) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மனைவிக்கு பயந்து வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை.. ஸ்கூட்டரால் சிக்கிய கணவர்!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 694 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply