வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
19 March 2025, 10:41 am

சென்னையில், இன்று (மார்ச் 19) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 200 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold Rate today

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 19) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 66 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யம் இருக்கு… மமிதா பைஜூ உடைத்த ரகசியம்..!!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரத்து 43 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் உயர்ந்து 114 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Ana Ana Padiye viral song டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!
  • Leave a Reply