சற்று தணிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
21 March 2025, 10:23 am

சென்னையில், இன்று (மார்ச் 21) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 200 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 66 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold price today

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 21) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 66 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 9 ஆயிரத்து 21 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 168 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 2 ரூபாய் குறைந்து 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Salman Khan Rashmika Mandanna Age Difference நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!
  • Leave a Reply