மெல்ல மெல்ல உயரத் தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
22 February 2025, 10:18 am

சென்னையில், இன்று (பிப்.22) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கியது முதலே தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்படுகிறது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

Gold rate today

இதன்படி, இன்று (பிப்.22) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 45 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: மொட்டை கடிதம்.. கம்ப்யூட்டர் லேபில் அரங்கேறிய கொடூரம்.. அரசுப் பள்ளி ஆசிரியர் சிக்கியது எப்படி?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!