தொடர் வீழ்ச்சி காணும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
27 February 2025, 10:13 am

சென்னையில், இன்று (பிப்.27) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: பிப்ரவரி தொடங்கி, இறுதி வந்த நிலையிலும் தங்கம் விலை ஏறுமுகத்திலே காணப்பட்டது. கிராமுக்கு 8 ஆயிரம் ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் 64 ஆயிரத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

Gold rate today

இதன்படி, இன்று (பிப்.27) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 64 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சினிமாவில் காலாவதியானதால் அரசியல் வருகை.. விஜயை கடுமையாக விமர்சித்த திருமா!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 738 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!