தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan27 March 2025, 10:30 am
சென்னையில், இன்று (மார்ச் 27) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 200 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 27) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் அதிகரித்து 65 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ரயிலில் வந்த அப்பா, மகள்.. ஸ்டேஷனில் காத்திருந்த அதிர்ச்சி.. அதிரவைத்த சம்பவம்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 983 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.