ரூ.61 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

Author: Hariharasudhan
30 January 2025, 10:29 am

சென்னையில், இன்று (ஜன.30) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த இரண்டு வாரமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவைச் சந்தித்தது.

Gold and Silver rate today

இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. இதன்படி, இன்று (ஜன.30) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து 60 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: சாலையில் நின்று கொண்டிருந்த தனுஷ் வெட்டிக்கொலை.. 9 பேர் கைதானதன் பின்னணி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 301 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 66 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 2 ரூபாய் உயர்ந்து 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…