வாங்க பர்ச்சேஸ் போலாம்.. அதிரடி வீழ்ச்சி கண்ட தங்கம் விலை!

Author: Hariharasudhan
14 December 2024, 10:37 am

சென்னையில் இன்று (டிச.14) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 90 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: விரதம் மாதம் என அழைக்கப்படும் கார்த்திகை மாதம், தொடர்ச்சியான சுபமுகூர்த்த நாட்களால் தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இதனிடையே, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வந்தது.

Silver Price today

ஆனால், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து உள்ளது. இதன்படி, இன்று (டிச.14) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 90 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 720 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 797 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply