தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
24 December 2024, 10:23 am

சென்னையில், இன்று (டிச.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. அதன் பின்னர், வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த தங்கம் விலை, அடுத்த சில நாட்கள் உச்சத்தை நோக்கிச் சென்றது. பின்னர், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது.

Silver Price today

இந்த நிலையில், மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கி உள்ளது. இதன்படி, இன்று (டிச.24) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ‘நான் எங்க அப்டி சொன்னேன்..’ இறக்கிய தவெக கொடி ஏற்றம்.. என்ன நடக்கிறது?

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 735 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 61 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் ஏதும் இல்லாமல் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 68

    0

    0

    Leave a Reply