புது வருடத்தில் புதிய சர்ப்ரைஸ்.. குறைந்தது தங்கம் விலை!
Author: Udayachandran RadhaKrishnan31 December 2024, 10:52 am
டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன் பின்னர், வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்த தங்கம் விலை, அடுத்த சில நாட்கள் உச்சத்தை நோக்கிச் சென்றது. பின்னர், கடந்த சில நாட்களாக மீண்டும் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது.
இந்த நிலையில் ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று சரிய தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ₹7,110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படியுங்க: பஞ்சு சாட்டையா? கொண்டு வருகிறேன்.. சோதித்து பார்க்கலாமா? திமுக கவுன்சிலருக்கு அண்ணாமலை சவால்!
ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கும், 24 காரட் தங்கம் ஒரு கிராம் 7,756 ரூபாய்க்கும் ஒரு சவரன் 62,048 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வள்ளி 98,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.