பொங்கல் பரிசாக அதிகரித்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Author: Hariharasudhan
13 January 2025, 10:30 am

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை, வார இறுதி நாட்களில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், பொங்கல் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Gold and Silver rate today

இதன்படி, இன்று (ஜன.13) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ’பக்கம் 21-க்கு நான் பிறக்கவில்லை’ – துரைமுருகனுக்கு அண்ணாமலை தடால் பதிலடி!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 5 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியும் 1 ரூபாய் உயர்ந்து 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Dhanush new movie announcement தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
  • Leave a Reply