சுடுகாட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை.. சடலத்தை புதைக்க முடியாமல் தவித்த கொடுமை!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2024, 6:00 pm
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், இறந்தவர்களின் உடல்களை, தாயார் குளம் சுடுகாடு மின் மயான தகன மேடை, வெள்ளைகுளம் மின் தயான மேடை , வையாவூர் இடுக்காடு மற்றும் சுடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதோ எரிவூட்டுவதோ போன்ற சடங்குகள் நடைபெறும்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் தாயார்குளம் சுடுகாடு இயங்கி வருகிறது. இந்த சுடுகாடு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், மோட்ச ஜோதி தகன அறக்கட்டளை மூலம் இயக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் நகர்ப்பகுதி மட்டுமல்லாமல், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், உடல்களை கொண்டு வந்து இங்கு நவீன தகன மேடை மூலம் எரியூட்டப்படுகிறது.
இந்நிலையில், நவீன தகன மேடையில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று ஒரு நாள், நவீன தகன மேடை இயங்காது என, அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சுடுகாடுக்கு பதிலாக, வெள்ளைக்குளம் நவீன தகன மேடையை பயன்படுத்திக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது”.
இயற்கை எய்திய ஒரு வயோதிகரின் சடலத்தை புதைக்க வந்த சமூக ஆர்வலர் கூறும் போது சுடுகாட்டுக்கு விடுமுறை என்பது அபத்தமானது. 24 மணி நேரமும் சுடுகாட்டுக்கு சடலங்கள் வரப்போவதில்லை.
மேலும் படிக்க: ராமர் கோவில் – பாபர் மசூதி குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? மதவெறி பிடித்த பாஜக.. ஜெயக்குமார் கொடுத்த பதிலடி!!
சடலங்கள் வராத இடைப்பட்ட நேரத்தில் தான் சுடுகாட்டு பராமரிப்பு பணிகளை” மேற்கொள்ள வேண்டும். இந்த செயல் மிகத் தவறானதாகும் என தெரிவித்தார்.
யாருக்கு எப்போது இறப்பு வரும் என தெரியாத நிலையில் தகனம் செய்கின்ற சுடுகாட்டுக்கு கூட விடுமுறையா என சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்புகின்றார்.