விலை உயர காத்திருக்கும் பெட்ரோல், டீசல்?: 119வது நாளாக இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை..!!
Author: Rajesh3 March 2022, 9:16 am
சென்னை: கடந்த 119 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 119 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது. தமிழகத்தில் மூன்று மாதங்களாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றாமல் உள்ளன.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு நவம்பர் 3ம் தேதி இரவில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது.
இதனால், அடுத்த நாள் தீபாவளியன்று நாடு முழுதும் லிட்டர் பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் சரிந்தது. தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின. இன்று வரை 119 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.