புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை… இன்றைய விலையை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க…!!
Author: Babu Lakshmanan2 April 2022, 8:14 am
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.
ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.108.45 ஆகவும், டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.98.28க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில், 2021 நவ., 3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.இந்த நிலையில், புதிய உச்சத்தை எட்டியிருப்பது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.