அப்பாடா.. நேற்று வரலாறு காணாத விலை உயர்வு.. இன்று சற்று ஆறுதல் : தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 11:56 am

அப்பாடா.. நேற்று வரலாறு காணாத விலை உயர்வு.. இன்று சற்று ஆறுதல் : தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வரத்திலிருந்து நேற்று வரை வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது. ஆனால், இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று ரூ.40 குறைந்தள்ளது.

சென்னையில் (30.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து கிராமுக்கு ரூ.5 குறியானது ரூ.5,865க்கும், சவரனுக்கு ரூ.46,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல், கிராமுக்கு ரூ.82.20க்கும், கிலோ வெள்ளி ரூ.82,200க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் (29.11.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.82.20க்கும், கிலோ வெள்ளி ரூ.82,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!