திமுக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிவு செய்ய விரைவில் TOLL FREE நம்பர் : அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2022, 6:29 pm

2024ல் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 25 பாராளுமன்ற தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெறும் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கணித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை- முன்னேற்றம் மற்றும் இது ஏழைகளுக்கான ஆட்சியாக உள்ளது.

இந்தியாவில் வீடில்லாத ஏழைகளுக்கு இதுவரை 52 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இனி கட்டப்படும் 16லட்சம் நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படுகின்றன. 17 கோடியே 96 லட்சம் ஆயுஸ்மான் பவன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி, கோதுமை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு 30 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரானா, 3வது, 4வது, 5வது அலை ஏற்படாதற்கு காரணம் மோடி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். முத்தலாக் தடை செய்ததன் மூலம் 82 சதவீதம் முத்தலாக் விவாகரத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

4கோடி போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கபட்டுள்ளது. 4கோடி போலி எல்பிஜி கேஸ் இணைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது. 1 கோடி 15 ஆயிரம் கோடி காதியில் மட்டும் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறோம். இந்தியாவில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரூபே கார்டு மூலம் 70 கோடி பேர் இணைந்து உள்ளார்கள். 2

2014 க்கு பின் தமிழகத்தில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 22,500 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை எட்டு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது.

மரபுசாரா எரிசக்தி துறை, 300 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. வெயில் மற்றும் காற்றின் சக்தியை பெறுவதில் உலகளவில் இந்தியா, 4வது இடத்தை பெற்றுள்ளது. இன்று முதல் வரும் ஜூன், 15ம் தேதி தேதி வரை பாஜக விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு திமுக கபட நாடகம். எல்லாக் கட்சிகளும் அவர்களது கருத்தை தெரிவிக்கலாம், அவர்களுக்கு கட்சி நம்பர் ஒன் கட்சி என தெரிவிக்கலாம். எல்லாக் காரியத்திலும் பாஜக மக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது.

பாரதி ஜனதா கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மேகதாது வேண்டும் என கர்நாடக சிவகுமார் ஊர்வலம் செல்கிறார், கேரளாவில் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு குறித்து திமுக ஸ்டாலின் பேசவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

மக்களின் அன்பைப் பெற்று நம்பர் ஒன் ஆக வருவதற்காக கடினமாக உழைப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தமிழகத்தில் நன்கு ஆட்சி செய்ய பாஜக ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்து இருந்தோம், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை டேட்டா வைத்து கூறுகிறோம்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது என்று கமிஷனர்க்கு தெரிகிறது, காவல்துறை நண்பர்களே சரியாக பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை கையைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது, தினசரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பலர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி ஆட்சியின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம். மூத்த தலைவர்கள் இதுகுறித்து முடிவெடுப்பார்கள். சசிகலா பாஜக கட்சியில் சேரலாம் என்று நயினார் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. மக்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது 8 சதவீதம் வாக்கை தாண்டி வளர்ந்து கொண்டு இருக்கிறது.

2024ல் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 25 எம்பிக்கள் பிஜேபிக்கு கிடைக்கத்தான் போகிறது. சேவை முன்னேற்றம் ஏழைகளுக்கான ஆட்சி போகின்றோம் மக்களை சந்திக்கப் போகின்றோம் பயனாளிகள் சென்று சந்திக்கப் போகின்றோம் அனைத்து மாவட்டங்களிலும் இன்றிலிருந்து 15 நாட்கள் எட்டு வருட சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழக அரசை எடுத்து நடத்த இதற்கு பாஜக தயாராக உள்ளது. எங்கள் கவனத்திற்கு வரும் ஊழல்கள் மக்கள் மன்றத்திற்கு வைக்க உள்ளோம். தமிழ்நாடு இதுவரை பார்க்காத ஊழல்களை இரண்டு வருடங்களில் பார்க்க போகிறோம். திமுக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிவு செய்ய டோல் பிரீ எண் ஆரம்பிக்கலாம் என யோசிக்கிறோம்.

அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை, புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை. ஜிஎஸ்டி கணக்கில் ரூ.25 ஆயிரம் கோடி தான் உள்ளது, ஆனால் மாநிலங்களுக்கு வரக்கூடிய தொகை 86 ஆயிரம் கோடி இருக்கிறது.
மத்திய அரசு தன்னுடைய 60,000 கோடி பணத்தை அதில் போட்டு 85 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்கப்பட்டுள்ளது வரலாற்றில் இது முதல் முறை வரலாற்று சாதனை. தமிழகத்துக்கு தேவையான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஜிஎஸ்டி கால்குலேசன்படியே வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முழுத் தொகையையும் வந்துவிட்டது இதைத்தாண்டி தமிழக அரசு மத்திய அரசுக்கு 25 ஆயிரம் கோடி வழங்க வேண்டிய நிலையில், ஜிஎஸ்டி பார்முலா தவறு என நிதியமைச்சர் கூறுவார். அடுத்து என்ன சொல்லப் போகிறார் என காத்துக் கொண்டிருக்கிறோம்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 775

    0

    0