தக்காளியை தள்ளுவண்டியில் தெரு தெருவாக விற்கலாம்… தமிழக அரசுக்கு யோசனை கூறிய செல்லூர் ராஜூ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 7:36 pm

அ.தி.மு.க வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எம் எல் ஏக்கள் தளவாய் சுந்தரம், செல்லூர்ராஜூ, அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை இல்லை எனவும், தக்காளி விலையை உயர விட்டிருக்ககூடாது.

தக்காளி, காய்கறி எல்லாம் ரேசன் கடையில் கொடுப்பதற்கு பதில் நடமாடும் தள்ளுவண்டியில் வைத்து தெரு தெருவாக விற்கலாம். அப்போது தான் மக்களுக்கு எளிதாக கிடைக்கும். இந்த அடிப்படை அறிவு கூட முதல்வருக்கு இல்லை. அரசாங்கம் விற்கும் மதுபாட்டிலில் 10 ரூபாய் அதிகம் வாங்கலாம் என்று கண்டிபிடித்தது திமுக.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வது எல்லாம் சும்மா. எனவும் தலையில் இருக்கும் வரை தான் முடி, கீழே விழுந்து விட்டால் மயிர். எங்கள் கட்சியில் இருந்து வெளியே போன ஓ.பி.எஸ்., தினகரன் போன்றவர்கள் மயிருக்கு சமம். அவர்கள் இருந்தவரை முடி போல் மலர் வைத்து அலங்காரம் செய்தோம். என்றும் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ