இரட்டைச் சதம் அடித்த தக்காளி… கோயம்பேடு மார்க்கெட்டில் ஜெட் வேக விலை உயர்வால் பொதுமக்கள் அவதி!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2023, 8:33 am
இரட்டைச் சதம் அடித்த தக்காளி… கோயம்பேடு மார்க்கெட்டில் ஜெட் வேக விலை உயர்வால் பொதுமக்கள் அவதி!
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 2 வாரங்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் ஓரளவு விலை குறைந்தது. அதன்படி, கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர், தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு இன்று தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி ரூ.20 விலை உயர்ந்து ரூ. 180க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சில்லறை வர்த்தகத்தில் தக்காளி கிலோ ரூ. 200க்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.